யால தேசிய பூங்காவில் “அர்ஜூன” எனும் ஆண் யானையின் பிறப்புறுப்பின் ஒரு பகுதியை முதலையொன்று கடித்து துண்டாக்கியதில் யானையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி யானை யால தேசிய பூங்காவில் குளமொன்றினுள் இறங்க முற்பட்ட போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அத்தோடு யானையின் பிறப்புறுப்பை முதலையொன்று கடித்தமை இலங்கை வரலாற்றிலேயே இதுவே முதற் தடவையென சிரேஷ்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிரேஷ்ட மிருக வைத்தியர் ஆனந்த தர்ம கீர்த்தி தலைமையிலான இரு குழுவினர் தாக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.