உயரமான முன்னாள் போராளியைச் சந்தித்த வடக்கு ஆளுநர்!

உயரமான முன்னாள் போராளியைச் சந்தித்த வடக்கு ஆளுநர்!

முன்னாள் போராளி ஒருவருக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல் குரே உறுதியளித்துள்ளார்.

ஆளுநர் ரெஜினோல் குரே வாரம் தோறும் முன்னெடுத்துவரும் மக்கள் சந்திப்பு நேற்று யாழ் சுண்டுண்குளியில் அமைந்துள்ள ஆளுநர் பணிமனையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதே ஆளுநர் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

குறித்த முன்னாள் போராளி சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்துவற்கு உதவிபுரியுமாறும் தமது வறுமை நிலைமையை கருத்தில் கொண்டு இதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்து தருமாறும் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, போராளியின் கோரிக்கையை ஏற்று வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமது செயலாளருக்கு பணிப்புரை விடுத்த ஆளுநர் மீண்டும் ஓரிரு வாரங்களில் தம்மை சந்திக்குமாறு தெரிவித்துள்ளார்.

இந்த மக்கள் சந்திப்பில், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டர்.