கொழும்பு புறநகர் பகுதியல் இரு இளம் பெண்கள் செய்து வந்துள்ள அதிர்ச்சிகர செயல்!

கொழும்பு புறநகர் பகுதியல் இரு இளம் பெண்கள் செய்து வந்துள்ள அதிர்ச்சிகர செயல்!

பத்தரமுல்லை ரொபட் குணவர்தன மாவத்தையில் முன்னெடுத்து செல்லப்பட்டுள்ள விபச்சார நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் இரு பெண்கள் உட்பட முகாமையாளர் ஒருவர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலங்கம காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய, கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் பெறப்பட்ட தேடுதல் பிடியாணைக்கு அமைய, குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள் தங்கல்ல மற்றும் குருநாகல் பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என்பதுடன், 27 மற்றும் 37 வயதுடையவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த பெண்கள் தனது வீடுகளில் கொழும்பில் தொழில் புரிவதாக கூறி, இவ்வாறான செயலில் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவர்கள் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், தலங்கமை காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.