மட்டக்களப்பு பிரபல உணவகத்தில் உணவில் பயங்கரம்! அவதானம்...

மட்டக்களப்பு பிரபல உணவகத்தில் உணவில் பயங்கரம்! அவதானம்...

மட்டக்களப்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் பழுதடைந்திருந்த உணவு வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு நடைப்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றுக்கே இவ்வாறான பழுதடைந்த உணவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவம் பிறந்தநாள் வீட்டில் இடம்பெற்றுள்ளமையால் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.

இதேவேளை, கவலையடைந்த வாடிக்கையாளர் உணவக உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட நகர பகுதிகளில் சுகாதாரமற்ற பழுதடைந்த உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்களை பரிசோதித்து உரிய சட்ட நடவடிக்கையினை மாநகரசபை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.