இலங்கையில் கதி கலங்கிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

இலங்கையில் கதி கலங்கிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

இலங்கையின் தனித்துவமாகக் காணப்படும் கபர கொய்யா எனப்படும் ஊர்வன குறித்து பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் கபரகொய்யா பிரித்தானிய உயர்ஸ்தானிகரை என்ன செய்தது?

இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் அவர்களே (James Dauris) water monitor எனப்படும் கபரகொய்யாவைக் கண்டு வியப்படைந்துள்ளார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்ற வளாகத்தில் கபர கொய்யாவை கண்ட இவர், தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இது தொடர்பான கருத்துக்களையும் புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார்.

அதன்படி, “இன்று காலை நாடாளுமன்றத்திற்கு அருகில் இந்த கபர கொய்யாவைப் (water monitor) பார்த்தேன். (நாம் அரசியலைப்பற்றி பேசவில்லை) இவ்வாறான 3 மீட்டர் நீளமான பல்லிகள் இலங்கையில் நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுகின்றன.” என குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக இலங்கையில் உள்ள கபர கொய்யா உடும்பின் தோற்றத்தைக் கொண்டது. ஆனாலும் உடும்பு வேறு கபர கொய்யா வேறு. உடும்பு Monitor Lizard என்றும் கபரகொய்யா water monitor என்றும் அழைக்கப்படுகின்றன.

உடும்பு இறைச்சி உண்பதில் பலருக்கு ஆர்வம் அதிகமுண்டு. இது சுவை மிகுந்ததென்று சுவைத்தவர்கள் சொல்கிறார்கள். கண்ணப்ப நாயனார் இறைவனுக்குப் படைத்தது உடும்புக்கறி என்றே சொல்கிறார்கள். உடும்பின் எண்ணெய் சிறந்த வலி நிவாரணியாகும்.

முற்காலத்தில் திருடர்கள் உயரமான சுவர்களைத் தாண்ட உடும்பின் வயிற்றில் கயிறு கட்டி உயரே தூக்கி எறிய உடும்பு சுவரைப் பிடித்துக் கொள்ளுமாம், பிடி தளராது என்னும் முழுநம்பிக்கையோடு திருடர்கள் கயிறு வழி ஏறி சுவர் தாண்டுவார்களாம்.

ஆனால் கபரகொய்யாவைப் பிடிப்பது அவற்றின் தோலுக்காக மட்டுமே. அவை வாழும் நாடுகளில் அவற்றைக் கொல்வது சட்டவிரோதமான செயலாகும். இலங்கையில்கூட உடும்பு கபர கொய்யா போன்றவற்றை வேடையாடுதல் தடைசெய்யப்பட்டுள்ளது.