காதலனை நம்பி கற்பை பறிகொடுத்த சிறுமி

காதலனை நம்பி கற்பை பறிகொடுத்த சிறுமி

புஸல்லாவ பகுதியில் காதலியை கடத்தி சென்று பலாத்காரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் மறக்கறி தோட்டம் ஒன்றின் கூடாரத்தினுள் இடம்பெற்றுள்ளது.

11 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் சிறுமியும் குறித்த இளைஞரும் 2 மாத காலமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இளைஞர் காதலியை தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதன் பின்பு தனது நண்பர் ஒருவரின் துணையுடன் திட்டம் தீட்டி குறித்த சிறுமியை மறக்கறி தோட்டத்திற்கு வரவழைத்து அவரின் கைகளை பின்னால் கட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி உள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

சிறுமி வீட்டிற்கு வர தாமதமானதால் அவரை தேடி வந்த சிறுமியின் பெரியப்பா மறக்கறி கூடாரத்தில் இருந்து சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

அதன் பின்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பின்பு குறித்த இளைஞர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி கம்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.