இந்த விவகாரத்தில் யாழ்ப்பாணத்துப் பெண்கள் முன்னிலையில்

இந்த விவகாரத்தில் யாழ்ப்பாணத்துப் பெண்கள் முன்னிலையில்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலே, தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகாத்து, வருவதாக வடமாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாய்வின் முடிவுகளுக்கமைய யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில், 2009 ஆம் ஆண்டில், 124பேரும், 2010ஆம் ஆண்டு 137பேரும், 2011ஆம் ஆண்டு 141பேரும், 2012ஆம் ஆண்டு 153 பேரும் 2013ஆம் ஆண்டு 158பேரும், 2015ஆம் ஆண்டு 139பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இத்தகவல்களின் படி தற்கொலை செய்து கொள்வோரில், 40-55 வயத்திற்கு உட்பட்ட பெண்களே அதிகளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவர்களில் அதிகமானோர் தனியாக வாழ முடியாத, சமூகக் காரணங்களினாலே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யுத்தத்தினால் கணவன் மற்றும் உறவினர்களை இழந்தமை, உடமைகள் அனைத்தையும் இழந்தமையே தற்கொலை செய்யும் அளவிற்கு தாக்கம் செலுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களாகிய காரணங்களினாலும், அதிகளவானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.

எனவே மனநிலை மட்டத்தை அதிகரிப்பதற்கு, ஆலோசனை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை அமைப்பது அவசியம் என கூறப்பட்டுள்ளது.