வித்தியா கொலை வழக்கின் தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு!

வித்தியா கொலை வழக்கின் தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு!

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பான வழக்கின் தீர்ப்பு, எதிர்வரும் 27ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

யாழ். மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாய நீதிபதிகள், இன்று (புதன்கிழமை) இத்தகவலை அறிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வந்த குறித்த வழக்கின் விசாரணைகள் கடந்த மாதம் முடிவுறுத்தப்பட்டு, நேற்றைய தினம் வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சியங்களின் தொகுப்புரையும், இன்று எதிரிகள் தரப்பு சாட்சிகளின் தொகுப்புரையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி இவ் வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதற்கு மன்று தீர்மானித்துள்ளது.

மாணவி படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டை இறுதிவரை 9 எதிரிகளும் மறுத்து வந்துள்ள நிலையில், இவர்களில் 7 பேருக்கு எதிரான குற்றச்சாட்டு எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் மன்றில் முடிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.