காலி அதிவேக வீதியில் வௌிநாட்டு பெண்ணிற்கு நடந்த கதி!!

காலி அதிவேக வீதியில் வௌிநாட்டு பெண்ணிற்கு நடந்த கதி!!

வௌிநாட்டு பெண்ணொருவரை ஏற்றி வந்த சிற்றூர்ந்தொன்று தெற்கு அதிவேக சாலையில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காலியிலிருந்து வந்த இந்த சிற்றூர்ந்து பண்டாரகம , களனிகம 14ம் கிலோமீற்றர் தூண் அருகில் அதிக மழை காரணமாக வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

எவ்வாறாயினும் , இந்த விபத்து காரணமாக குறித்த வௌிநாட்டு பெண்ணுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

இந்த பெண் இங்கிலாந்தை சேர்ந்தவர் எனவும் , இவர் புகைப்படக் கலைஞர் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.