மது மற்றும் செல்போன் வாங்குவதற்காக பெற்றோர் செய்த செயல் !

மது மற்றும் செல்போன் வாங்குவதற்காக பெற்றோர் செய்த செயல் !

மது மற்றும் செல்போன் வாங்குவதற்காக தமது 11 மாத குழந்தையை 23000 ரூபாவிற்கு விற்ற பெற்றோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பலராம் முகி, அவரது மனைவி சுகுதி தம்பதிகளுக்கு இரண்டு ஆண்பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.

இந்நிலையில், சோம்நாத் என்பவரது ஒரே மகன் விபத்தில் உயிரிழந்துள்ளார். மகனை இழந்ததால் சோம்நாத் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பெரும் வருத்தத்திற்கு உள்ளாகியிருந்தனர்.

வேறு குழந்தையை தத்தெடுக்க அவர்கள் நினைத்திருந்த வேளை தமது உறவினர் மற்றும் அவரது நண்பர் மூலம் பலராம் தனது 11 மாத குழந்தையை 23000 ரூபாய்க்கு விற்றிருந்தார். இதற்கு அவரது மனைவியும் உடன்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குழந்தையை விற்று பெற்றுக் கொண்ட பணத்தில் செல்போன், புடைவை, மது முதலிய பொருட்களை பலராம் வாங்கியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில், தொடர்ந்தும் பொலிஸார் குறித்த பெற்றோரிடம் விசாரணை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.