பாடசாலை மாணவர்களுக்கு மற்றுமொரு அதிஷ்டம்

பாடசாலை மாணவர்களுக்கு மற்றுமொரு அதிஷ்டம்

ஸ்ரீலங்காவில் உள்ள 45 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்காக சுறக்ஸா காப்புறுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலவசக் கல்வியை மேலும் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

காலி சவுத் லாண்ட வித்தியாலயத்தில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், தற்போதைய யுகத்திற்கு ஏற்ற வகையில் கல்வி தொடர்பில் உன்னதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.