‘ஆச்சி’யாகும் கோவை சரளா

‘ஆச்சி’யாகும் கோவை சரளா

தமிழ் சினிமாவில் ‘ஆச்சி’ என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படுபவர் மறைந்த குணச்சித்திர நடிகை மனோரமா. எம்.ஜி.ஆர். – சிவாஜி முதற்கொண்டு அஜித் – விஜய் வரை மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் அவர்.

மனோரமா, பாட்டி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமான கடைசி படம், பேராண்டி. இதில் ஒரு பாடலை சொந்தக்குரலில் பாடிய அவர், திடீரென்று உடல்நலம் பாதித்து மரணம் அடைந்தார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த படக்குழுவினர், தற்போது கோவை சரளாவை அந்த வேடத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

தமிழ்ப் படவுலகில் நகைச்சுவை நடிகைகளில் வரவு மிகக்குறைந்த தருணத்தில் ஆச்சி மனோரமாவின் வாரிசாக சொல்லப்படும் கோவை சரளா, இப்போது மனோரமா நடிக்க முடியாமல் போன வேடத்தில் நடிக்கின்றார்.

வழக்கமாகவே கலகலப்புக்கு பேர் போன கோவை சரளா, இதில் மனோரமா ஏற்ற வேடத்தை நடிக்க வேண்டும் என்பதால், அவரைப் பிரதி பண்ணுவதற்கு மிகவும் பயத்துடன் நடித்து வருவதாக கூறப்படுகிறது.