குக்குலேகங்கை வான் கதவுகள் திறப்பு: மக்களுக்கு எச்சரிக்கை

குக்குலேகங்கை வான் கதவுகள் திறப்பு: மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக குக்குலேகங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் புலத்சிங்கள, அகலவத்தை, இங்கிரிய மற்றும் அவற்றை அண்டிய பகுதிகளில் உள்ள தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைப் பெய்ய வாய்புகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.