கேரளாவில் கடத்தப்பட்டு கங்கேசன்துறையில் கைவிடப்பட்ட வஸ்து!

யாழ் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பொதியிலிருந்து 154 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் இன்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் பொதி ஒன்று இருப்பதாக ஸ்ரீலங்கா கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் இன்று மாலை குறித்த பொதியை கைப்பற்றி சோதனைக்குட்படுத்தியுள்ளனர். இதன்போதே குறித்த பொதியிலிருந்து 153.7 கிலோ கேரளகஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரளகஞ்சா தற்போது யாழ் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.