மீண்டும் சிறைக்கு செல்லும் சசிகலா

உடல் நிலை சீரின்மை காரணமாக சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள குளோபல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவர் நடராஜனை பார்ப்பதற்கு ஐந்து நாள் பிணையில் வந்திருந்த சசிகலா, மீண்டும் சிறைக்கு புறப்படுகின்றார்.

தனக்கு வழங்கப்பட்டிருந்த ஐந்து நாட்கள் பிணை இன்று முடிவடைகின்ற நிலையில், நேற்று மாலை 12.00 மணிக்கு வைத்தியசாலை சென்று கணவரை பார்வையிட்டதோடு உறவினர்களையும் சந்தித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் வைத்தியசாலை வாசலில் சசிகலாவை பார்ப்பதற்கு காத்திருந்த அவரின் தொண்டர்கள், அந்த இடத்தில் வைத்து மூன்று குழந்தைகளுக்கு சசிகலாவின் பெயரை சூட்டினர். அதன் பின்னர் சசிகலாவின் தொண்டர் ஒருவர், நெப்போலியனின் புத்தகம் ஒன்றினை சசிகலாவிற்கு பரிசலித்தார்.

இன்று காலை 6.30 மணிக்கு மீண்டும் வைத்தியசாலைக்கு சென்று கணவரை பார்வையிட்டதன் பின்னர், சிறைக்கு செல்லவதாக கூறிய சசிகலா மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்தால் வருவதாக கூறிவிட்டு விடைபெற்றார். அவரை சிறையில் கொண்டு போய் விடுவதற்காக அவரின் தொண்டர்கள் புறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.