200 பேர் பாதிப்பு மருத்துவமனையில்

காலை உணவுக்காக வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாகப் பாதிக்கப்பட்ட 200 பேர், கண்டி மருத்துவமனையில் இன்று சேர்க்கப்பட்டுள்ளனர்.

கண்டி ஹாரகம ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களே இந்தப் பாதிப்பை எதிர்கொண்டனர்.

தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமையால் அவர்களுக்கு திடீர் மயக்கம், வாந்தி ஏற்பட்டது எனத் தெரியவருகிறது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு அவசர சிசிக்கை அளிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.