நுணாவில் பகுதியில் வாள்வெட்டு: இருவர் படுகாயம்

நுணாவில் பகுதியில் வாள்வெட்டு: இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி- நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் காலை இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இனம்தெரியாத நபர்களே இவ்வாறு இரு இளைஞர்கள் மீது சரமாரியாக வாள்களால் வெட்டிய தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.