இலங்கைக்கு அச்சுறுத்தல்! படையினர் எச்சரிக்கை

இலங்கைக்கு அச்சுறுத்தல்! படையினர் எச்சரிக்கை

ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் பறப்பது தொடர்பில் அடிக்கடி சர்ச்சைகள் ஏற்படுகின்ற நிலையில், இதனால் இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக விமானப்படை எச்சரித்துள்ளது.

இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில், விமனப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக காணப்பட்ட இவ்வகை விமானங்கள் இலங்கைக்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், இது குறித்து விமானப்படை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஒரு கிலோ கிராமிற்கும் அதிக எடையுள்ள பறக்கும் கமராக்கள், ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டுமாயின், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில், திடீரென ஆளில்லா விமானம் ஒன்று பறந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.