முடிவுக்கு வந்தது ரயில்வே சாரதிகளின் போராட்டம்

முடிவுக்கு வந்தது ரயில்வே சாரதிகளின் போராட்டம்

ரயில்வே சாரதிகளால் முன்னெடுக்கப்பட்டுவந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி செயலாளருக்கும் இடையே இன்று மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலை அடுத்தே பணிபகிஷ்கரிப்பு போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தொழிற்சங்கம் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் குறித்து தீர்வு பெறுவதற்காக விசேட குழுவொன்றை நியமிப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் உறுதியளித்திருக்கின்றார்.

இதனையடுத்து நேற்று இரவு திடீரென ஆரம்பிக்கப்பட்ட பணிபகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.