சாவகச்சேரியில் துரத்தித் துரத்தி வாள்வெட்டு! CCTVயில் வெளியான திடுக்கிடும் காட்சிகள்

யாழ்.சாவகச்சேரி – நுணாவில் - 190 ஆம் கட்டைப் பகுதி ஏ 9 வீதியிலுள்ள 'ஒட்டுத் தொழிலகம்' ஒன்றினுள் புகுந்த இனந்தெரியாத குழுவினர் கடை உரிமையாளரை வாளால் வெட்டியுள்ளனர்.

இதன்போது குறித்த கடையில் தொழில்புரிந்த இளைஞனையும் தாக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.10 அளவில் இடம்பெற்றுள்ளாதாக சாவகச்சேரி காவற்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த கடை உரிமையாளர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

சம்பவம் குறித்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்தது.