அரி­யா­லை­யில் இளை­ஞன் சுட்­டுக்­கொலை!! நடந்தது என்ன? நேரடி றிப்போட்

யாழ்ப்­பா­ணம் அரி­யா­லை­யில் மோட்­டார் சைக்­கி­ளில் வந்த இரு­வர் இளை­ஞர் ஒரு­வ­ரைச் சுட்­டுக்­கொன்­று­விட்­டுத் தப்­பிச் சென்றனர்.

பட்­டப் பக­லில் நடந்த இந்­தச் சம்­ப­வத்­தால் அந்­தப் பகு­தி­யில் பெரும் பதற்­றம் நில­வி­யது.

அரி­யாலை உத­ய­பு­ரத்தைச் சேர்ந்த டொன்­போஸ்கோ டெஸ்­மன் (வயது – 25) என்ற இளை­ஞனே சுட்­டுக்­கொல்­லப்பட்டார்.

கடற்­றொ­ழி­லா­ளி­யான இவர் தனது நண்­ப­னு­டன் மோட்­டார் சைக்­கி­ளில் சென்­று­கொண்­டி­ருந்­த­போது சம்­ப­வம் இடம்­பெற்­றது.

சம்­ப­வத்­தில் படு­கா­ய­ம­டைந்த அவர் யாழ். போதனா மருத்துவமனைக்கு எடுத்­துச் செல்­லப்­பட்­டார்.

அங்கு அவ­ருக்கு இரு தட­வை­கள் அறு­வைச் சிகிச்சை செய்­யப்­பட்­டது.

ஆனால், துப்­பாக்­கிக் குண்டு அவ­ரது சுவா­சக் குழா­யை­யும் தாக்­கிச் சென்­ற­தால் சிகிச்சை பய­ன­ளிக்­கா­மல் அவர் நேற்­றி­ரவு உயி­ரி­ழந்­தார்.

“டெஸ்­மன் தனது வீட்­டில் உணவு உட்­கொண்­ட­போது ஓர் அலை­பேசி அழைப்பு வந்­தது. உட­ன­டி­யா­கவே வீட்­டிலி­ருந்து புறப்­பட்­டார். அதன் பின்­னர் அவர் சுடப்­பட்­டார் என்ற தக­வல்­தான் கிடைத்­தது” என்று அவ­ரது உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னர்.

கூடப்­ப­ய­ணித்­த­வ­ரின் தக­வல்

டெஸ்­ம­னு­டன் சென்­றி­ருந்த அவ­ரின் நண்­பர் தெரி­வித்­த­தா­வது: “நானும் டெஸ்­ம­னும் மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்­தோம்.

நண்­ப­னின் மோட்­டார் சைக்­கி­ளுக்கு பெற்­றோல் இல்லை என்று கூறி­ய­தால் எமது மோட்­டார் சைக்­கி­ளி­லி­ருந்து சிறிது பெற்­றோலை எடுத்­துச்­சென்று கொடுத்து விட்டு வந்­து­கொண்­டி­ருந்­தோம்.

மணி­யந்­தோட்­டம் சந்­தியை அண்­மித்­த­போது எதிரே மோட்­டார் சைக்­கி­ளில் முகத்தை மூடிய தலைக்­க­வ­சம் அணிந்­த­படி இரு­வர் வந்­த­னர்.

எம்மை அண்­மித்­த­தும் திடீ­ரென அவர்­க­ளது மோட்­டார் சைக்­கிள் நின்­றது. அதில் பய­ணித்­த­வர்­க­ளில் ஒரு­வர் துப்­பாக்­கியை எடுத்­துச் சுட்டார்.

அது டெஸ்­ம­னின் முது­கில் காயம் ஏற்­பட்­டது.

பயப்­பீ­திக்­குள்­ளான நான் மோட்­டார் சைக்­கிளை இன்­னும் வேக­மா­கச் செலுத்தி அந்த இடத்தை விட்டு ஓடிச் சென்­றோம்.

செல்­லும் வழி­யில் தனக்கு மயக்­கம் வரு­கி­றது என்று டெஸ்­மன் கூறி­னார்.

உட­ன­டி­யாக அங்கு இருந்த ஓட்­டோ­வில் அவரை ஏற்றி மருத்துவமனைக்­குக் கொண்டு சென்­றேன்” என்று தெரி­வித்­தார்.

மருத்துவமனையில்

துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட்ட சம்­ப­வம் காயப்­பட்ட இளை­ஞ­னின் உற­வு­க­ளுக்­குத் தெரி­ய­வந்­த­தும், அவர்­கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அதி­ர­டி­யா­கக் கூடி­னர்.

அத­னால் வைத்­தி­ய­சா­லை­யில் பதற்­ற­மான நிலை ஏற்­பட்­டது.

அத­னைச் சமா­ளிக்க மேல­திக பொலி­ஸார் மருத்துவமனை­யில் குவிக்­கப்­பட்­ட­னர்.

இது தொடர்­பில் பொலி­ஸார் தீவிர விசா­ரணை மேற்­கொண்டுள்ள­னர்.

டெஸ்­ம­னு­டன் பய­ணித்­த­வர் தற்­போது பொலிஸ் பாது­காப்­பில் வைக்­கப்­பட்­டுள்­ளார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­பவ இடத்­தில் பொலி­ஸார் விசா­ரணை மேற்­கொண்­ட­னர்.

துப்­பாக்­கிச் சூடு நடந்த பகு­தி­க­ளில் பொலி­ஸார் தேடு­தல் நடத்தினர்.

எனி­னும் எவ­ரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை.