ஐஎஸ் அமைப்பில் இலங்கை மருத்துவர்கள்!! திடுக்கிடும் காணொளி

ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய தேசம் தீவிரவாதிகளுடன் இணைந்து சிறிலங்காவைச் சேர்ந்த மருத்துவர்களும் பணியாற்றுவதாக, ஐஎஸ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள காணொளி ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

ஐஎஸ் தீவிரவாதிகளின் மருத்துவ வசதிகள் பற்றிய சுமார் 15 நிமிடக் காணொளி ஒன்று அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் காணொளியில் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படும் மருத்துவரான, அபு அல் முகாதில் என்பவர், ஐ.எஸ் அமைப்பின் மருத்துவ வசதிகள் தொடர்பாக உரையாற்றியுள்ளார்.

ரக்காவில் உள்ள ஐஎஸ் அமைப்பில் மருத்துவ நிலையத்தில் மிக நவீன வசதிகள் இருப்பதை இந்தக் காணொளி வெளிப்படுத்தியுள்ளது.

இங்கு இந்திய மருத்துவர் பணியாற்றுவதாக சந்தேகிக்கப்படுகிறது.

சிறிலங்கா, அவுஸ்ரேலியா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளின் மருத்துவர்கள் இந்த மருத்துவ நிலையத்தில் பணியாற்றுவதாக, இந்திய மருத்துவர் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உலகெங்கும் உள்ள மருத்துவ நிபுணர்களை இஸ்லாமிய அமைப்புடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அதேவேளை, குறிப்பிட்ட இந்திய மருத்துவர் தென்மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று இந்திய புலனாய்வு அமைப்புகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.