மட்டக்களப்பு காத்தான்குடியில் கத்திக்குத்து

மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்றிரவு ஒருவர் மீது கத்திக்குத்து பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி சபீக் என்பவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

காத்தான்குடி 5 ஐ சேர்ந்த இவர் தன்னுடைய மனைவியுடன் பயணிக்கும் போதே இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

மட்டக்களப்பு காத்தான்குடியில் கத்திக்குத்து - பாதிக்கபட்டவர் ஆபத்தான நிலையில்!

அவரது மணைவியும் சிறிய காயங்களுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடியில் 6 இல் இருக்கும் மனநிலை பாதிக்கப்பட்டவரே இவர்களை கத்தியால் குத்தியதாக தெரியவருகின்றது.

குறித்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.