யாழில் இளைஞர் சுட்டுக்கொலை; பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை!

யாழப்பாணம் அரியாலைப் பகுதியில் நேற்றையதினம் நடந்த துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

குறித்த சூட்டுச் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமையவே அதுதொடர்பான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ரூவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே பல வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் பிற்பகல் வேளையில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தினால் 24 வயதுடய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்தார்.

இதன்படி குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யும்வரை தாம் வைத்தியசாலையிலிருந்து சடலத்தைப் பொறுப்பேற்கப்போவதில்லை என உயிரிழந்தவரின் உறவினர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.