யாழ் பாதுகாப்பு படைத் தளபதியை சந்தித்த முக்கியஸ்தர்

நோர்வே பிரதிநிதியும் ஸ்ரீலங்காவிற்கான தூதுவரான தோர்போர்ன் காஸ்டாட்சேதர் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியை சந்தித்துள்ளார்.

யாழ் பலாலி தலைமையகத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பினை நினைவுகூறும் வகையில் யாழ் பாதுகாப்பு படைத்தளபதியால் நோர்வே தூதுவருக்கு நினைவு சின்னம் பரிசளிக்கப்பட்டுள்ளது.