இலங்கையில் மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்

இலங்கையின் மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் நபர் ஒருவர் தனது மனைவியின் கைகளை வெட்டிப் படுகாயப்படுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நுவரெலியா ஊவா பரணகம பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் வசிக்கும் கணவன் மனைவி ஆகியோருக்கிடையில் நேற்றைய தினம் தகராறு எழுந்துள்ளது. இது கடும் வாய்த்தர்க்கமாக மாறியதனையடுத்து குறித்த கணவன் கடும் ஆவேசத்துக்குள்ளானார்.

இதன் தொடர்ச்சியாக அவர் கத்தி ஒன்றினை எடுத்து தனது மனைவியின் கைகளை சடுதியில் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மனைவி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்தவர் 27 வயதான ஏ.சீ.அனுலாவதி என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பான விசாரணைகளை ஊவா பரணகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.