விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள இலங்கை வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இலங்கையில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியொன்றில் கலந்துகொள்வதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய பிரஜையொருவர், ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் இன்று இவ் விபத்து நேர்ந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, அதனை இந்தியாவிற்கு அனுப்புவதற்கு இந்திய தூதரகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.