இலஞ்சம் பெற்ற கிராம சேவகர் கைது

பம்பலபிட்டிய பிரதேசத்தின் கிராம சேவை அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேகொண்ட சுற்றிவளைப்பின் போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

பிரதேசத்தின் வியாபாரி ஒருவரின் பெயரை தேர்தல் இடாப்பில் பதிவதற்காக 25,000 ரூபா இலஞ்சமாக பெற முற்பட்ட வேளையில் குறித்த கிராம சேவை அதிகாரி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.