யாழ் இளைஞர் சுட்டுக்கொலை: முப்படைகளையும் விசாரணைக்குட்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாணம் அரியாலையில் இளைஞர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முப்படைகளையும் விசாரணைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

நேற்றையதினம் யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு பகுதியில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து, பின்னர் சிகிச்சை பலனின்றி டொன்பொஸ்கோ ரிக்மன் என்ற 24 வயது இளைஞர் உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் பாரிய விசாரணைகள் பொலிஸ் தரப்பால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.