ஜனாதிபதியின் காலினால் இழுக்கும் அமைச்சர்களே பிரச்சினை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சைட்டம் தொடர்பான காத்திரமான தீர்மானத்துக்கு தடையாக ஒரிரு அமைச்சர்களே தடையாகவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

ஜனாதிபதியும் பிரதமரும் இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கத்தின் தீர்மானத்தை அறிவிப்பதாக கூறியுள்ளனர். இவர்களுக்கு தீர்மானம் எடுக்க விடாமல் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன ஆகியோர் தடைக்கல்லாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.