இன்று முதல் மாலை நேரத்தில் மழை

நாட்டின் பல பாகங்களுக்கு இன்று (24) முதல் பிற்பகல் நேரத்தில் மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இவ்வாறு மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களத்தின் அலுவலக உத்தியோகத்தர் கசுன் பஸ்குவல் தெரிவித்துள்ளார்.

இந்த மழையுடன் கூடிய காலநிலை இன்று முதல் நாளையும், நாளை மறுதினமும் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் இந்த மழை பெய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்