ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு இன்னும் சந்தர்ப்பம் உள்ளது

அடுத்து வரவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இன்னும் வாய்ப்புள்ளதாக, அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு, ஜனாதிபதியுடன் கலந்துரையாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற கட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எத்தகு பிரச்சினைகள் வந்தாலும் புதிய அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்படும் எனவும் டிலான் பெரேரா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுஇவ்வாறு இருக்க, எதிர்வரும் தேர்தலில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படத் தயாராக இல்லை என, பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர குறிப்பிட்டுள்ளார்.