திடீரென அதிகரித்த நீர் கட்டணம் !

தனமல்வில-கிதுல்கொட பகுதியில் நீர் கட்டணத்திற்கு அறவிடப்படும் தொகை கூடுதலாக பதியப்பட்டதால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாதத்திற்கான நீர் கட்டணம் வழமையாக 300 அல்லது 500 ரூபாவாக இருக்கும் என்றும் கடந்த சில காலங்களில் நீர் கட்டணம் 5000 மற்றும் 10000 ரூபா வரையிலும் அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

அத்தோடு இந்த திடீர் நீர் கட்டண அதிகரிப்பு குறித்து அந்தப் பகுதியின் நீர்வழங்கள் வடிகால் அமைப்புச் சபை அதிகாரியிடம் முறையிட்ட போதிலும் அவர் எந்த வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.