வேலையற்ற பட்டதாரிகள் கொழும்பில் நாளை பாரிய ஆர்ப்பாட்டம்

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் நாளைய தினம் கொழும்பு புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 11 மணியளவில் நடத்தப்படும் என்று ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்குவர முன்னர் தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.