பம்பலப்பிட்டியிலும், வெள்ளவத்தையிலும் மனிதர்களை உண்ணக்கூடிய ஆபத்தான முதலைகள்

பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை எல்லையை பிரிக்கும் ஏரியில் மனிதர்களை உண்ணக்கூடிய ஆபத்தான முதலைகள் உலாவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த ஏரிக்கு அருகில் சென். பீட்டர் பாடசாலையின் மைதானம் மற்றும் பாடசாலைக் கட்டிடம் என்பன உள்ளன.இதனால் இந்த ஏரியில் உள்ள முதலைகளினால் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த ஏரியின் எல்லையில் அதிகமான மக்கள் குடியிருப்பு வீடுகள் உள்ளன. வீடுகளில் உள்ளவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளிடம் பொது மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.