வவுனியாவில் வேளாங்கன்னி மாதா திருஉருவச்சிலை உடைத்து தீக்கிரை

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் வேளாங்கன்னி மாதா திருஉருவச்சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைத்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு 11.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக காணப்பட்டு வந்த வேளாங்கன்னி மாதா திருஉருவச்சிலை அப்பகுதி கத்தோலிக்க மக்களின் வணக்க தலமாகவும் காணப்பட்ட நிலையில் இனந்தெரியாதோரால் சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடி கூடு உடைக்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது.

அதேவேளை கண்ணாடி கூட்டுக்குள் வெளியில் காணப்பட்ட சிறிய திருஉருவச்சிலையொன்றும் எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பண்டாரிக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.