மஹிந்தவை கவிழ்த்தது விமலும், கம்மன் பிலவும் - சுதர்ஷினி சீற்றம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பிலவும், விமல் வீரவன்ஸவுமே காரணம் என பிரதியமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

தெவிநுவர பகுதியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் தனக்கு வேலை செய்ய முடியவில்லை எனவும், சிலருக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படுவதாகவும் விமல் வீரவன்ஸவே ஊடகங்கள் முன்னிலையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, மஹிந்தவை சுற்றிக் கொண்டு முதலைக் கண்ணீர் வடிக்கும் உதய கம்மன் பிலவும் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றாவிட்டால் மஹிந்தவிற்கு வாக்களிக்கப்போவதில்லை என குறிப்பிட்டார்.

இவர்களது இவ்வாறான செயற்பாடுகளே தமக்கு கவலையளிப்பதாக பிரதியமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார்.

இதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.