விபத்தில் ஒருவர்: பலி சாரதி கைது

ஆராச்சிக்கட்டு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லொரியுடன் மோட்டார் சைக்களில் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவரை தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில், 35 வயதான குறித்த நபர் பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொரி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது