அரி­யா­லை துப்­பாக்­கிச் சூடு! சிக்கியது ஆதாரம்??

அரி­யா­லை­யில் நேற்­று­ முன்­தி­னம் சுட்­டுக் கொல்­லப்­பட்ட இளை­ஞனை அடை­யா­ளம் காணப்­ப­டாத புல­னாய்வு அணி ஒன்றே சுட்­டுக்­கொன்றதா என்­ப­தைக் கண்­ட­றி­வ­தற்­கான விசா­ர­ணை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்று முன்னர் அறிவிக்கப் பட்டது

‘‘இந்­தச் சம்­ப­வம் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் மேற்­கொள்­ளப்­பட்­டதா என்­பதை ஏற்­றுக் கொள்­ளவோ அல்­லது நிரா­க­ரிக்­கவோ மாட்­டேன்’’ என்று இது தொடர்­பில் பதி­ல­ளித்த யாழ்ப்­பா­ணப் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி காமினி ஹேவா­வி­தா­ரண தெரி­வித்­தார்.

அரி­யா­லை­யில் நேற்­று­முன்­தி­னம் மாலை நடத்­தப்­பட்ட துப்­பாக்­கிச்­சூட்­டில் இளை­ஞன் ஒரு­வன் உயி­ரி­ழந்­தி­ருந்­தான்.

புல­னாய்­வுப் பிரி­வின் துப்­பாக்­கிச் சூட்­டி­லேயே இளை­ஞன் உயி­ரி­ழந்­தா­கப் பெரும் குற்­றச்­சாட்டு ஒன்று முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.

இந்­தக் குற்­றச்­சாட்­டுத் தொடர்­பில் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­கா­ரி­யி­டம் வின­வி­ய போது.

‘‘இந்­தப் பிர­தே­சத்­தில் மணல் அகழ்வு நடை­பெ­று­வது வழக்­கம். மணல் அகழ்வு சுற்­றி­வ­ளைப்­புக்கு எமது அதி­கா­ரி­கள் சென்­ற­னர். அதனை மக்­கள் தவ­றான எண்­ணி­யுள்­ள­னர்.

ஆனால், இந்­தச் சம்­ப­வம் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் மேற்­கொள்­ளப்­பட்­டதா என்­பதை ஏற்­றுக் கொள்­ளவோ அல்­லது நிரா­க­ரிக்­கவோ மாட்­டேன்.

மேலும், துப்­பாக்­கிச் சூடு தொடர்­பில் சில தட­யங்­கள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளோம்’’ – என்­றார்.

பொலிஸ் புல­னாய்­வுப் பிரி­வி­னர் தவிர்ந்த வேறு படை­க­ளின் புல­னாய்வு அணி ஒன்று இந்­தச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக என்­பது குறித்த விசா­ர­ணை­கள் ஏற்­க­னவே நடந்து வரு­கின்­றன

ஹெரோ­யின் போதைப் பொருள் கடத்­தப்­ப­டு­வ­தா­கக் கிடைத்த தக­வல் ஒன்­றை­ய­டுத்து அந்­தப் பகு­திக்கு வந்த புல­னாய்­வா­ளர்­கள் இந்­தச் செய­லில் ஈடு­பட்­டி­ருக்­க­லாம் என்­கிற ஊகங்­கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.

ஆனால், பொலிஸ் தரப்­பி­லி­ருந்து இன்­னும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.