மாரடைப்பால் உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு இழப்பீடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாரடைப்பினால் உயிரிழந்த மீனவர் ஒருவரின் குடும்பத்திற்கு கடற்றொழில் அமைச்சின் ‘தியவர திரிய திவிசயுர’ திட்டத்தின்கீழ் 2 லட்சம் ரூபாய் காப்புறுதி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சின் வழிகாட்டலில் மாவட்ட கடற்றொழில் திணைக்களம், கிழக்கில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் முதல் முறையாக இவ் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் ருக்சான் குறூஸ் தெரிவித்தார்.

மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பினால் உயிரிழந்த வாகரை கதிரவெளியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் குமரகுரு என்ற மீனவரின் குடும்பத்தினருக்கே இவ் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.