இலங்கை கடற்படை அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.!

இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதும், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும் வாடிக்கையான செயலாக மாறிவருகிறது.

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவற்றினை தடுத்திட தமிழக அரசோ, மத்திய அரசோ ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்ததாக தெரியவில்லை.

இந்நிலையில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களின் 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசு மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்திட தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென்பதுவே எளிய மீனவர்களின் கோரிக்கை.