கொழும்பு, புதுக்கடையில் விநோதநபரால் பரபரப்பு

கொழும்பு, புதுக்கடை பிரதேசத்தில் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி அமைதி போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அங்கு கீழாடை இன்றி புத்தம் ஒன்றுடன் வந்த நபர், தனது எதிர்ப்பை வெளியிட்ட விடயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ராஜினி திராணகம, ராஜன் ஹுல், தயா சோமசுந்தரம், கே.ஸ்ரீதரன் போன்றவர்கள் அந்த புத்தகத்தின் எழுத்தாளர்களாகும்.

கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற இந்த போராட்டத்திலேயே குறித்த நபர் இந்த புத்தகத்துடன் அரை நிர்வாணமாக கலந்து கொண்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட தமது வழக்குகளை மீண்டும் வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரி அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 27 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று அரசியல் கைதிகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கமாறு வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.