மீன்பிடிக்க சென்றவர் யானை தாக்கி உயிரிழப்பு!

மீன்பிடிக்க சென்றவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த பரிதாப சம்பவம், அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பாலமுனை பகுதியை சேர்ந்த 60 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் மீன்பிடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த நபர் விரைந்து அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.