அரி­யா­லைக் கொலை குறித்து விசா­ரிக்க 4 பொலிஸ் குழுக்­கள்

அரி­யா­லைத் துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தில் உயி­ரி­ழந்த இளை­ஞ­னின், முது­குப் பக்­க­மாக நுழைந்த துப்­பாக்­கிக் குண்டு நெஞ்­சைப்பிரித்து வெளி­யே­றும்­ போது நுரை­யீ­ர­லைப் பாதித்­த­தா­லும் அத­னால் அதிக குரு­திப் பெருக்­கி­னா­லுமே இளை­ஞன் உயி­ரி­ழந்­தான் என்று உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னை­யில் தெரி­ய­வந்­தது.

அரி­யாலை உத­ய­பு­ரத்தை சேர்ந்த டொன்­போஸ்கோ டெஸ்­மன் (வயது – -25) என்ற இளை­ஞனே நேற்­று­முன்­தி­னம் கொல்­லப்­பட்­டார்.

யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சட­லம் நேற்று உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது.

அதன் பின்­னர் வைத்­தி­ய­சா­லை­யின் சட்ட மருத்­துவ நிபு­ணர் இளை­ஞ­னின் சட­லம் நேற்று மாலை­யில் உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

இறு­திக் கிரி­யை­கள் நாளை இடம்­பெ­ற­வுள்­ளது என்று உற­வி­னர்­க­ளால் தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­ப­வம் தொடர்­பில் நேற்­றி­ரவு வரை­யில் எவ­ரும் கைது­செய்­யப்­ப­ட­வில்லை.

விசா­ரணை தொடர்­கி­றது என்று யாழ்ப்­பா­ணப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.