புத்தகங்களுக்கு தீ வைத்த ஆசிரியர்

பிரத்தியேக வகுப்புக்கு மாணவன் சமூகம் தராத காரணத்தால், கோபமடைந்த ஆசிரியர் மாணவன் வகுப்பில் விட்டுச் சென்ற புத்தகங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார் எனத் தெரியவருகிறது.

இந்தச் சம்பவம் வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

தரம் 5 மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு நடத்தி வரும் ஆசிரியர், அன்றையதினம் குறித்த மாணவன் வகுப்புக்கு வருகை தரவில்லை என்பதை அறிந்தார்.

மாணவன் தனது புத்தகங்களை வகுப்பறையில் விட்டுச் சென்றுள்ளார். அதனை ஆசிரியர் தீ வைத்துள்ளார் என்று பெற்றோரால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியர் ஏனைய மாணவர்களையும் துன்புறுத்தல் செய்வதாக பெற்றோர்கள் சிலர் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்ட போதும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.