தேசிய அரசாங்கத்திற்கு எதிராக தலதா மாளிகையில் பூஜை

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் தேசிய அரசாங்கத்திற்கு எதிராக மஹிந்த தலைமையிலான பொது எதிரணி சமய வழிபாடுகளில் ஈடுபடவுள்ளது.

இதற்கமைய, நாளைய தினம் கண்டி தலதா மாளிகையில் விசேட பூஜை வழிபாடுகள் நடத்தப்படவுள்ளன.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் தலதா மாளிகையின் கெப்பட்டிபொல மண்டபத்தில் முற்பகல் 10 மணிக்கு இந்த பூஜை இடம்பெறவுள்ளது.

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான இயக்கத்தின் தலைவர் பெங்கமுவே நாலக தேரர் பூஜையை நடத்தவுள்ளார்.

அதன் பின்னர் “புதிய அரசியலமைப்பு எமது நாட்டிற்கு வேண்டாம்“ என வலியுறுத்தும் மாநாடொன்றும் தலதா மாளிகையின் கெப்பட்டிபொல மண்டபத்தில் நாளை மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுகளில் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.