பயங்­க­ர­வா­தச் சட்­டத்தை உடன் நீக்­க ­வேண்­டும்

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­க­வேண்­டும். அதற்­குப் பதி­லா­கக் கொண்டு வரப்­ப­டும் சட்­டம் பன்­னாட்­டுத் தரங்­க­ளைக் கொண்­ட­தாக அமை­ய­வேண்­டும்.

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்­தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­கள் தொடர்­பான விட­யங்­களை உட­ன­டி­யாக மீளாய்வு செய்­ய­வேண்­டும்.

இவ்­வாறு ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யா­ளர் பப்லோ தெரி­வித்­தார்.

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்ள நிலை­யி­லும், தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­விக்க வேண்­டும் மற்­றும் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்க வேண்­டும் என்ற குரல்­கள் வடக்கு – கிழக்­கில் பல­மாக ஒலித்­து­வ­ரும் நிலை­யி­லும், ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யா­ளர் நேற்று மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

கொழும்­பில் பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இரா­ணு­வத்­தி­னர் வர்த்­த­கச் செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­வதை நிறுத்­த­வேண்­டும். வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் காணப்­ப­டு­கின்ற இரா­ணு­வப் பிர­சன்­னத்­தைக் குறைக்­க­வேண்­டும்.

இரா­ணு­வத்­தி­ன­ரால் கைப்­பற்­றப்­பட்­டுள்ள காணி­கள் தொடர்­பான ஒரு வரை­ப­டத்தை உட­ன­டி­யா­கத் தயா­ரிக்­க­வேண்­டும்.

மீள­ளிக்­கப்­ப­டாத காணி­க­ளுக்கு இழப்­பீடு வழங்­கு­வது அவ­சி­ய­மா­ன­தா­கும். இது தொடர்­பில் இரா­ணு­வத்­த­ரப்­பி­னர் மட்­டும் முடி­வெ­டுக்­காத வகை­யி­லான திட்­டம் வேண்­டும்.

பாதிக்­கப்­பட்ட சமூ­கங்­க­ளின் நன்மை கருதி உண்­மை­யைக் கண்­ட­றி­யும் ஆணைக்­குழு நிறு­வப்­ப­ட­வேண்­டும். இதற்கு ஒரு பரந்­து­பட்ட ஆணை வழங்­கப்­ப­ட­வேண்­டும். இதற்­கான சட்­ட­வ­ரைவு விரை­வாக கொண்டு வரப்­ப­ட­வேண்­டும்.

உண்­மை­யைக் கண்­ட­றி­யும் ஆணைக்­கு­ழு­வுக்­கான ஆணை­யா­ளர் நிய­ம­னத்­தில் பாதிக்­கப்­பட்­டோர் இடம்­பெ­று­வதை உறு­திப்­ப­டுத்­த­வேண்­டும்.

பாதிக்­கப்­பட்ட மக்­கள் தமது உயி­ரி­ழந்த உற­வு­களை நினை­வு­கூ­ரு­வ­தற்­கான உரி­மையை உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.

நினை­வு­கூ­ரும் செயற்­பா­டா­னது இழப்­பீடு பெறு­வ­தைப் போன்ற ஒரு உணர்­வைக் கொண்­டது. அர­ச­மைப்பு மறு­சீ­ர­மைப்­புச் செயற்­பா­டா­னது சரி­யான முறை­யில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

எனது அறிக்­கை­யில் நீதித்­துறை மற்­றும் சட்­டமா அதி­பர் திணைக்­க­ளம் தொடர்­பாக பல பரிந்­து­ரை­களை முன்­வைக்­க­வுள்­ளேன் – என்­றார்.