முல்லைத்தீவில் இப்படி ஒரு அட்டகாசம்

முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட சுமார் ஆறு இலட்சம் பெறுமதியான 18 முதிரை மரக்குற்றிகளை வாகனம் மூலம் கடத்தி சென்றவர்களை கிளிநொச்சி – முல்லைத்தீவு பொலிஸ் அணியினரின் விஷேட பொலிஸ் பிரிவினர் முறியடித்துள்ளனர்.

கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் போரிற்கு பின்னரான காலப்பகுதியில் தொடர்ந்து இயற்கை வளங்கள் பல்வேறு தரப்பினராலும் சூறையாடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தர்மபுரம் பகுதியில் வைத்து வாகனம் ஒன்றை சோதனையிட்டபோதே விஷேட பொலிஸ் பிரிவினர் மரக்குற்றிகளை கைப்பறியதுடன், கைதுசெய்துள்ள சந்தேகநபர்களை தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைத்துள்ளனர்.

யுத்தம நிறைவடைந்த நிலையில் தமது பிரதேசத்தில் இவ்வாறு மரங்கள் வெட்டி அகற்றப்படுதல் அதிகரித்துள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.