இரு மாணவ குழுக்களுக்கிடையே பலத்த மோதல்!

பொலன்னறுவை-புலத்சிபுர பகுதியில் புலத்சிபுர தேசிய பாடசாலையில் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பலத்த மோதல் பொலிஸாரின் வருகைக்குப் பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பாடசாலையின் விஞ்ஞான பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் நேற்று 8.30 மணியளவில் பாடசாலையின் உணவு விடுதியில் வாய்த்தர்க்கத்தில் ஆரம்பித்து 10.30 மணிக்கும் மேலாக நீடித்து சென்றதாக தெரிவிக்கின்றனர்.

விஞ்ஞான பீட விரிவுரையாளர்கள் மாணவர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சி செய்தும் முடியாமல் போயுள்ளது.

இந்த நிலையில் 119 எனும் இரகசிய பொலிஸ் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பாடசாலை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

பின்பு குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மாணவர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கின்றனர்.