தமிழர் காணிகள் பிரிக்கப்படுவதற்கு எதிராக ஊர்வலம்

தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் பிரிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து வாழைச்சேனையில் இன்று கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்புக் கல்குடாத் தொகுதியிலுள்ள உள்ளூராட்சி மன்ற எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இவ்வாறு காணிகள் பிரிக்கப்பட்டுள்ளன என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

வாழைச்சோன கைலாயப்பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, பிரதேச செயலக முன்றலில் நிறைவடைந்தது.

பேரணியில் கிராம மட்ட அமைப்புக்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.